ADVERTISEMENT

'மாவு கட்டு' போடப்பட்ட காலுடன் 240 கிலோ மீட்டர் நடக்கும் இளைஞர்... வைரலாகும் வீடியோ!

01:19 PM Apr 01, 2020 | suthakar@nakkh…


உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 42,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் 1500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வர்லால் என்ற இளைஞர் மத்தியப் பிரதேசத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். கரோனா பாதிப்பின் காரணமாக வேலை இழந்த அவர், தன் வீட்டிற்குச் செல்லலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

ADVERTISEMENT


ஆனால் வாகனங்கள் ஏதும் இல்லாததால் 520 கிலோ மீட்டர் தூரத்தைத் தன் அடிப்பட்ட காலுடன் கடக்க முயன்றுள்ளார். பாதி தூரம் வரை இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் உதவியதால், அதில் ஏறி ராஜஸ்தான் மாநில எல்லைக்கு வந்துள்ளார். ஆனால் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியுள்ளதால், காலில் போடப்பட்டிருந்த மாவு கட்டினைப் பிரித்துவிட்டு மீதமுள்ள 240 கிலோ மீட்டர் தூரத்தைப் பொடி நடையாகக் கடந்து வருகிறார். இவர் அடிபட்ட காலுடன் நடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT