Advertisment

காவல்துறையின் பதிவில் ரஜினியின் புகைப்படம்; வைரலாக்கும் ரசிகர்கள்...

thtrhrh

மேற்கு ஆஸ்திரேலியாவின் டெர்பி காவல் துறை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஜினியின் படத்தை பயன்படுத்தி ஒரு வினோத வழக்கை பற்றி பதிவு செய்துள்ளது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது மூச்சுக்கற்றில் 0.341 அளவிற்கு ஆல்கஹால் அளவு இருப்பது கண்டறியப்பட்டது . இந்த அளவு என்பது மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சையில் இருக்கும் நபர் அல்லது கோமா நிலையில் இருக்கும் நபர் வாகனத்தை ஓட்டி வருவதற்குச் சமம் என்று போலீசார் கூறியுள்ளனர். அதனை ஆச்சரியமாக குறிப்பிடும் வகையில் ரஜினியின் 2.0 படத்தில் வரும் வசனம் உள்ள டெம்ப்லேட்டை போட்டுள்ளனர். இதனை கண்டறிந்த ரஜினி ரசிகர்கள் தற்போது அந்த பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisment

Advertisment

2.0 Australia
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe