Deputy Governor Dr. Tamilisai Soundararajan heard the grievances of the people!

Advertisment

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்று தங்களுக்கு உள்ள குறைகளையும், நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளையும் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தெரிவித்தனர். அத்துடன், ஆளுநருடன் பொதுமக்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.