துணைநிலை ஆளுநர் மாளிகையில் புகார் பெட்டிகள் வைப்பு!

Deposit Complaints Boxes in the House of Deputy Governors!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆலோசனை மற்றும் புகார் பெட்டிகளை தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை (பொறுப்பு) ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நிறுவினார்.

முன்னதாக, ஆளுநர் மாளிகையில் தரப்படும் புகார்கள், ஆலோசனைகள், குறைகளைத் தீர்ப்பதற்காக கோரிக்கைகள், அதற்கான தனிப்பிரிவுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கரோனா பரவலால் இதுபோன்ற புகார்களை அளிக்க வருவோரின் வசதிகளைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இரண்டு புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் மாளிகையின் உயரதிகாரிகள், காவல்துறையின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

governor Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe