Advertisment

உள்ளாட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றக்கோரி  புதுவையில் ஆர்ப்பாட்டம்!

puducherry

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி மாதந்தோறும் தவறாமல் சம்பளம் வழங்க வேண்டும், தகுதியான அனைத்து ஊழியர்களுக்கும் எம்.ஏ.சி.பி வழங்க வேண்டும், பணியின்போது இறந்தோர் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி உள்ளாட்சித் துறை அலுவலகம் எதிரே கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

tn

ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு கௌரவ தலைவர் சேஷாசலம் கோரிக்கைகள் வலியுறுத்தி விளக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

Advertisment

struggle Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe