Demonstration demanding opening of closed ration shops in Puducherry

Advertisment

புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகளைத்திறந்து பொருட்களை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகள்உடனடியாகத்திறக்கப்பட வேண்டும், அரிசி, பருப்பு சமையல் எண்ணெய், சோப்பு, போன்ற அத்தியாவசியப் பொருட்களை ரேஷன் கடை மூலம் வழங்க வேண்டும், வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்வோர் ஒருங்கிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் பார்க்குமுடையான் பட்டு கொக்கு பார்க் சிக்னல் அருகே நடைபெற்றது.

சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துரங்கம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்க ஆலோசகர் சுகுமாரன், கௌரவ தலைவர் சௌந்தரராஜன், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் முருகானந்தம், குடிசை வாழ் பெருமன்றம் மோகனசுந்தரம், பூவுலகின் நண்பர்கள் தமிழ்மணி, திராவிட விடுதலைக் கழகம் ஐயப்பன், உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.