Demolition of flats; Tamil families in Delhi are suffering

டெல்லியில் கால்வாய்யைஆக்கிரமித்து கட்டி இருப்பதாக சுமார் 370 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்த வீடுகளை இடித்து அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது.

டெல்லியில் 'மதராசி கேம்ப்' பகுதியில் நான்கு தலைமுறைகளாக 300க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் படி மொத்தமாக 500 குடும்பங்கள் வசிக்கும் கூடிய குடியிருப்பு பகுதிகள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வீடுகளை இழந்தவர்களுக்கு அதே பகுதியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் மாற்று இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 370 தமிழ் குடும்பங்கள் இருக்கும் நிலையில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே இதுவரை மாற்று வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ளதாக அங்கு வாழும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு வெகு தொலைவில் மாற்று இடம் கொடுக்கப்பட்டதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவேதனையுடன் தெரிவித்துவருகின்றனர். மாற்று இடம் இல்லாதோர் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு எங்கு செல்வது என தெரியாமல் பலர் தவித்து வருவதால் அங்கு கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.