Advertisment

நாடு முழுவதும் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா...

 Delta Plus Corona for 48 people across the country ...

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு, தளர்வுகள் என ஒவ்வொரு மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸின் தாக்கமாககருப்பு பூஞ்சை போலமாற்று சில நோய்களும் பரவி வரும் நிலையில் தற்போது உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு இந்தியாவில் உறுதி செய்யப்பட்டு வந்தது.

Advertisment

இந்நிலையில் நாடு முழுவதும் 45 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம்48 பேருக்கு இதுவரை உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 7 பேருக்கும் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Advertisment
India corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe