டெல்லியில் ஒரு பெண், இஸ்லாமியர் என்ற காரணத்தினால் தாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.தெருவில் உள்ள நாய்களுக்கு உணவளித்த பெண்ணை,அங்கிருந்தவர்கள் 'நீநாய்களுக்கு உணவளிக்கக்கூடாது' என்று கூறியுள்ளனர். ஆனால் அந்தப் பெண் அவர்கள் சொல்வதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாய்களுக்கு உணவளிக்க, அனைவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
அவர் ஒரு காஷ்மீர் முஸ்லீம் என்பதால்தான் அவர்கள் தாக்கியுள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.தாக்கிய அனைவரும்கைது செய்யப்படுவர் என்று புகாரை விசாரிக்கும்துணை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற தாக்குதலில் மக்கள் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.