
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 63 நாட்களாகடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல் மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்தியபலகட்டபேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது.
இந்நிலையில் குடியரசு தினமான நேற்று (26.01.2021) விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி காலை அமைதியாக ஆரம்பித்தாலும்மாலைவன்முறையில் முடிந்தது.தடியடி,கண்ணீர்புகைக்குண்டு வீச்சு எனபோர்க்களமாகதலைநகர் டெல்லிகாட்சியளித்தது.டெல்லிஎல்லையில் சுமார்2 லட்சம்டிராக்டர்கள்அணிவகுத்து நின்றன. இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர்;ஒருவர் உயிரிழந்தார்.
அதேபோல்காவல்துறையினர் சிலருக்கும் காயம்ஏற்பட்டது. இப்படி குடியரசு தினத்தின்பிற்பாதியில்போராட்டத்தால் ஸ்தம்பித்ததுடெல்லி.இந்நிலையில் போராட்டம் காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், டெல்லியில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)