Advertisment

நீட் தேர்வில் 100 சதவீத மதிப்பெண் எடுத்தும் முதலிடத்தைத் தவறவிட்ட மாணவி...

delhi student lose rank in neet result due to age

நீட் தேர்வு முடிவுகளில் 100 சதவீத மதிப்பெண் எடுத்தும் வயது காரணமாக முதல் இடத்தை இழந்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த அகன்ஷா சிங் என்ற மாணவி.

Advertisment

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13- ஆம் தேதி நடந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. நாடு முழுவதும் 14.37 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவுகளில் டெல்லியைச் சேர்ந்த அகன்ஷா சிங் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த சோயப் அஃப்தாப் ஆகியோர் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்தனர். ஆனால், வயது அடிப்படையில் அகன்ஷா சிங் இளையவர் என்பதால், இந்தப் பட்டியலில் அவருக்கு இரண்டாம் இடமும், சோயப் அஃப்தாப்புக்கு முதல்இடமும் வழக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அதிகாரி ஒருவர், "ஒடிசாவின் சோயெப் அஃப்தாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த அகன்ஷா சிங் இருவரும் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இருப்பினும், அஃப்தாப் வயது அதிகம் என்பதால், அவர் தேசிய தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

neet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe