delhi railway station women incident police arrested railway employees

ரயில் நிலையத்தில் வைத்து பெண் ஒருவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

தலைநகர் டெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (22/07/2022) அதிகாலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில்வே காவல்துறைக்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளார். அதில், ரயில் நிலையத்தின் நடைமேடையில் உள்ள மின் பராமரிப்பு ஊழியர்களுக்கான அறையில் வைத்து தன்னை நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதையடுத்து, விசாரணை நடத்திய காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர். இரண்டு பேரை பாதுகாப்புக்கு நிறுத்திவிட்டு, மற்றவர்கள் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்திருப்பதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த சம்பவம், டெல்லி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment