கடந்த எட்டாம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாகநடைபெற்றது.நடைபெற்ற வாக்குப்பதிவுக்கானவாக்கு எண்ணிக்கை 21மையங்களில் தொடங்கியுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில்ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இன்று காலை8 மணிக்குவாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவரும்நிலையில், டெல்லியில் பல இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று வருகிறது. 12.09மணி நிலவரப்படிஆம் ஆத்மி 57 தொகுதிகளிலும்,பாஜக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி53.6 சதவீதவாக்குகளும்,பாஜக39.31சதவீதவாக்குகளும், காங்கிரஸ் 4.10 சதவீதவாக்குகளும் பெற்றுள்ளது.
ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட அதிக தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்லியில் ஆம் ஆத்மிகட்சிதொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.