ADVERTISEMENT

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக... போராட்டத்தில் குதித்த போலீஸார்...

12:16 PM Nov 05, 2019 | kirubahar@nakk…

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லியின் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்களுக்கு எதிராக இன்று டெல்லி மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு ஏராளமான போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பு வரை சென்றது. இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 50 பேர் காயமடைந்தனர். இதில் 12 பைக்குகள், சிறைக்கைதிகளை ஏற்றிச்செல்லும் 8 வாகனங்கள், வழக்கறிஞர்களின் கார்கள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. வழக்கறிஞர்களின் செயலை எதிர்த்து போலீசார் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் "எங்களுக்கு நீதி வேண்டும்" என கூறி அவர்கள் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று போராட்டத்தை கைவிட வேண்டுகோள் வைத்துள்ளனர். போலீஸாரின் இந்த போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT