ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீசார்

delhi police notice sent to rahul gandhi 

டெல்லி காவல்துறையினர்சார்பில் ராகுல் காந்தியிடம்விளக்கம் கேட்டு நோட்டீஸ்ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் 13 மாநிலங்களில் 3,970 கிலோமீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடினார். இதனிடையே ஸ்ரீநகரில் ராகுல் காந்தி நடைப்பயணம்மேற்கொண்ட போது, "பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகக் கேள்விப்பட்டேன்" என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி டெல்லி போலீசார் தரப்பில்இருந்து ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், "பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் பற்றிய விவரங்களைத்தெரிவித்தால்சம்பந்தப்பட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போலீஸ்தரப்பில் இருந்து பாதுகாப்பு தரப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notice
இதையும் படியுங்கள்
Subscribe