டெல்லியில் உள்ள புல் பிரகலாத்பூரில் பகுதியில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவினர் நடத்திய என்கவுன்ட்டரில் ராஜா குரேஷி மற்றும் ரமேஷ் பகதூர் ஆகிய இரு குற்றவாளிகள் இன்று (17/02/2020) அதிகாலை 05.00 மணியளவில் கொல்லப்பட்டனர்.
இந்த என்கவுன்ட்டரில் இருபுறமும் 30 சுற்று வரை போலீஸார் சுட்டதால் தோட்டாக்கள் சிதறி சாலையில் கிடந்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.