Advertisment

செங்கோட்டையில் கொடி ஏற்றிய சம்பவம்; காரணமானவர் கைது!

deep sidhu

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகபோராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று (26.01.2021) ட்ராக்டர்பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸார் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.

Advertisment

இதனிடையே டெல்லிசெங்கோட்டையில் சிலர், சீக்கியர்களின் புனிதக் கொடியை ஏற்றினர். இதற்குகடும்கண்டங்கள் எழுந்தன. இந்த நிலையில் பஞ்சாபிநடிகர்தீப்சித்து, விவசாயிகளை செங்கோட்டையை நோக்கி வழிநடத்தியதாகவும், செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டதற்கு அவரேகாரணம்எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டினார்.

Advertisment

செங்கோட்டையில் கொடியேற்றியதைதீப்சித்துவும்தனது ஃபேஸ்புக் லைவ்வில் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக அவர், “எதிர்ப்பைதெரிவிக்கும் விதமாக செங்கோட்டையில் நிஷன் சாஹிப்பை (சீக்கியர்களின் புனிதக் கொடி) ஏற்றினோம்” எனக் கூறினார். இதன்பிறகு டெல்லியில் கலவரத்தைத் தூண்டியதாக, தீப்சித்துமீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மேலும் தீப்சித்துவைகைது செய்ய துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகைவழங்கப்படும் என்றும் டெல்லி காவல்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், தீப்சித்து, டெல்லிபோலீஸாரின் சிறப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லிகலவரத்தில் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங் மற்றும் குர்ஜந்த் சிங் ஆகியோர்பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசுத்தகை அறிவித்துள்ளது டெல்லி காவல்துறை. இவர்களும் செங்கோட்டையில் கொடியேற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

delhi police farm bill Farmers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe