delhi nursing college hostel warder money missing incident and students issue

Advertisment

டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மருத்துவமனைநிர்வாகத்தின் கீழ் அகில்யாபாய் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படித்து வரும் நர்சிங் மாணவிகளுக்காக அங்கு மாணவிகள் விடுதி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் அங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு இந்த விடுதியில் உள்ள பி.எஸ்சி. நர்சிங் 3ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 2 பேர், பிற வகுப்பு மாணவிகள் என சிலரும்விடுதி வார்டனுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு விடுதிக்குதிரும்பி வந்தனர்.அப்போது, வார்டன் தனது பேக்கில் வைத்திருந்த 8 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருப்பதை அறிந்து விடுதியில் தங்கியிருக்கும் குறிப்பிட்ட 2 மாணவிகள் தான் தனது பேக்கில் இருந்து பணத்தை திருடி இருக்க வேண்டும் என்று அவர் சந்தேகப்பட்டு மற்ற மாணவிகளின் உதவியுடன் அந்த 2 மாணவிகளையும் ஆடைகளை களைந்து அவர் சோதனை செய்தார். அப்போது அந்த சோதனையில் எந்த பணமும் மாணவிகளிடம் இருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த மாணவிகள் பெற்றோர்கள் விடுதிக்குவந்து தங்கள் மகள்களை ஆடைகளை களைந்து வார்டன் துன்புறுத்தி உள்ளதாக கல்லூரி நிர்வாகத்திடமும், போலீசிலும் புகார் அளித்தனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த விடுதியில் சம்பந்தப்பட்டவார்டன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக கல்லூரி முதல்வர், மூத்த பேராசிரியர்கள் அடங்கிய ஒரு குழு ஒன்றை கல்லூரி நிர்வாகம் அமைத்துள்ளது. மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்த சம்பவம் கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.