டெல்லியில் இன்று (20.12.2019) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநகர், சண்டிகர், மதுரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. அதேபோல் பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/earth quake555.jpg)
வட மாநிலங்களின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்டா, காஜியாபாத், க்ரேட்டர் நொய்டா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கின. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Follow Us