Advertisment

வேலை வாய்ப்புகளை உருவாக்க மாநில முதல்வர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்குழு கூட்டம் (NITI AAYOG MEETING)இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்தும், மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவுள்ள அம்சங்கள் குறித்தும் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை செய்தார். அதே போல் மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்தும் கூட்டத்தில் விவாதித்தனர். இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

DELHI PARLIAMENT PM NARENDRA MODI REQUEST FOR CMS IMPLEMENT THE JOB OPPORTUNITIES

நிதி ஆயோக் கூட்டத்தின் இறுதியில் மாநில முதல்வர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். 2025-க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் வருவாயை அதிகரிப்பதில் ஏற்றுமதி துறை முக்கியமானது. ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். அதன் பிறகு தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் தனித்தனியே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசனை செய்தனர்.

Delhi FOR TODAY India JOB OPPORTUNITIES Meeting NITI AAYOG Parliament
இதையும் படியுங்கள்
Subscribe