Advertisment

நிர்பயா வழக்கு- புதிய நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு!

டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளியின் மறு சீராய்வு மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், போபண்ணா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு நிர்பயா வழக்கை நாளை (18.12.2019) காலை 10.30 மணிக்கு விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளி அக்ஷய்குமார் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

DELHI NIRBHAYA CASE NEW JUDGES BENCH ANNOUNCED SUPREME COURT

இந்த வழக்கு இன்று (17.12.2019) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி திடீரென விசாரணையில் இருந்து விலகினார். இதனையடுத்து இந்த வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ANNOUNCED case Delhi India judges NEW BENCH Nirbhaya Supreme Court
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe