Advertisment

கபடி வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சியாளர் 

delhi kabaddi player incident complaint filed coach 

Advertisment

கபடி வீராங்கனை ஒருவர் தன்னுடைய பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்தகபடி வீராங்கனை (வயது 27) ஒருவர் போலீசில் அளித்த புகார் ஒன்றில், "கபடி வீராங்கனையான நான் ஜோஹிந்தர் என்பவரிடம் 2012 ஆம் ஆண்டில் பயிற்சி பெற்றேன். அவர் தன்னை 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை புகைப்படமாகஎடுத்து வைத்துக்கொண்டுஅதனை என்னிடம் காட்டி, இந்த புகைப்படங்களைவெளியிடுவதாகக் கூறி 2018 ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் 40 லட்ச ரூபாய்க்கும்மேல் பெற்றுக்கொண்டதாக" புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட கபடி வீராங்கனையிடம் போலீசார் விசாரணைமேற்கொண்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் ஜோஹிந்தர் தலைமறைவாகி விட்டார். இவரைகைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம்டெல்லியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

kabadi police Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe