Advertisment

ஜே.என்.யூ. பதிவாளர் விளக்கம் தர மத்திய அரசு அழைப்பு!

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகக் கழக வளாகத்தில் நேற்று (05.01.2020) ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்கள், பேராசிரியர்களை பயங்கரமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த மாணவர்கள்,பேராசிரியர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள், வெளி நபர்கள் எப்படி உள்ளே வர முடிந்தது, முகமூடி அணிந்து எப்படி தாக்குதல் நடத்தது, அதை தடுக்காமல் பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Advertisment

delhi jnu students incident police investigation union government

இந்த தாக்குதலில் முகமூடி அணிந்தவர்கள் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் அல்லது ஏபிவிபி என்று சொல்லப்படும் வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவைப் பெற்ற இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது கேட்டிற்கு வெளியே பெரும் திரளாக பொதுமக்கள் குவிந்து இருப்பதாக போலீசார் தகவல் அளித்திருக்கிறார்கள். ஆகவேதான் பதற்றத்தைத் தணிப்பதற்காக அவர்கள் சாலைகளை மூடி வைத்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

delhi jnu students incident police investigation union government

இதனிடையே டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டணத்தைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் குறித்து விளக்கம் தர டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக பதிவாளர், பல்கலைக்கழக தலைவர் உள்ளிட்டோருக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

union government JNU STUDENTS Delhi India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe