சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன. கண்ணீர்புகைக்குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் இதுவரை 39 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Advertisment

delhi issues caa peoples police fir filled 630 persons

இந்த வன்முறை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. அதேபோல் டெல்லியில் வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

delhi issues caa peoples police fir filled 630 persons

Advertisment

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைப்பு. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு குழுக்கள் மூலம் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையால் வீடிழந்த மக்களை சமூக நலக்கூடத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.