முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த மாதம் காலமானார். அவர் டெல்லி மாநில கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவராக இருந்தார். அதனால் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பெரோஸ் ஷா கோட்லா என்ற பெயரை மாற்றி அருண் ஜெட்லியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. அருண் ஜெட்லிக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.

Advertisment

 Delhi International Cricket Ground NAME ARUN JAITLY AND VISITORS SEATING BUILDING VIRAT KOHLI NAME

இதேபோல் மைதானத்தில் உள்ள ஒரு பார்வையாளர் இருக்கை மாடத்திற்கு (கேலரி) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட்கோலி, ஷிகர் தவான் உட்பட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர்.