டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மற்றும் டெல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இஸ்ரேல் தூதரகத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட விசாரணையில், வெடித்தது குறைந்த சக்தியுள்ள குண்டு என்றும், சம்பவம் நடந்த இடத்தில் சில உடைந்த கண்ணாடிகள் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்பது தெரிய வந்துள்ளது.