கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rfghrtyhty.jpg)
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அந்த வகையில் டெல்லியில் நேற்று (24/02/2020) நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் வன்முறையை கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு இடையேயும் வடகிழக்கு டெல்லியில் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
டெல்லி வன்முறையில் உயிரிழப்பு 5 ஆகஅதிகரித்துள்ளது. கலவரத்தில் தலைமை காவலர்ஒருவர், பொதுமக்கள் 4 பேர் எனமொத்தம் 5 பேர்இறந்த நிலையில் 105 பேர் காயமடைந்துள்ளனர் எனபோலீசார்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த கலவரத்தின்போது துப்பாக்கியால் சுட்டஷாருக் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)