/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jjsiisissisi.jpg)
நாடு முழுவதும் கரோனாஇரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாஅதிகரித்து வரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி, பிரதமர் மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியிலும் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமைநான்காயிரம் பேருக்கு கரோனா உறுதியானது. நேற்று 3 ஆயிரத்து 548 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதுடன், கரோனாபாதிக்கப்பட்ட 15 பேர் பலியானார்கள். இதனையடுத்து டெல்லி அரசு இரவு நேர ஊரடங்கைஅறிவித்துள்ளது.
இரவு 10 மணிமுதல்காலை 5 மணிவரைஇந்த ஊரடங்கு அமலில் இருக்குமெனடெல்லிஅரசு தெரிவித்துள்ளது. இன்று இரவு முதல் அமலுக்கு வரவுள்ள இந்த இரவு நேர ஊரடங்கு, ஏப்ரல் 3௦ வரை நீடிகவுள்ளது. டெல்லியில் கரோனாவின்நான்காவது அலையைஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து நாங்கள் பரிசீலிக்கவில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அத்தகைய முடிவு மக்களுடன் ஆலோசித்த பிறகே எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)