யாரை மனைவியாக எடுத்துகொள்வது... தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரிய வழக்கில் மத்திய அரசு கேள்வி!!

delhi

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தன்பாலின திருமணத்தை நமதுசமூகம்அங்கீகரிக்காது எனநீதிமன்றத்தில் தனது பதிலை அளித்து இருக்கிறது.

தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் சார்பாக தலைமை வழக்கறிஞர் துஷார் மேதாஆஜரானார். இந்த வழக்கு தொடர்பான விவாதத்தில் தன்பாலினத் திருமணங்களை திருமண சட்டத்தில் இணைப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும்,நமது சமூகமும்,சட்டமும், கலாச்சாரமும் தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்காதுஎனவும் தெரிவித்தார்.

திருமண உறவின்போது மனைவி 7 ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால் தண்டனை வழங்கப்படும் எனக்கூறிய அவர், தன்பாலின திருமணத்தில் யாரை மனைவியாகஎடுத்துக்கொள்வது கேள்வி எழுப்பியதோடுஇது தன்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு தன்பாலின சேர்க்கை குற்றம்அல்லஎன உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்த நிலையில், தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் இல்லை என மத்திய அரசு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Central Government Delhi highcourt
இதையும் படியுங்கள்
Subscribe