Advertisment

"அரசின் இந்த மனநிலை நீடித்தால் அது ஜனநாயகத்தின் சோகமான நாளாக அமையும்" - டெல்லி உயர் நீதிமன்றம்!

Advertisment

delhi hc

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியிலும் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பிறகு இந்தப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு மகளிர் உரிமைகள்குழு உறுப்பினர்கள்நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா ஆகியோரும்ஆசிப் இக்பால் தன்ஹா என்ற மாணவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் கடந்த வருடம் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இந்தநிலையில், இவர்கள் பெயில் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மூவருக்கும் பெயில் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும், போராட்டங்கள் குறித்து டெல்லி நீதிமன்றம் சில கருத்துக்களை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம், "அரசியலமைப்பு அளித்துள்ள போராட்ட உரிமைக்கும், தீவிரவாத செயல்பாட்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது” என தெரிவித்துள்ளது. மேலும், "கருத்து வேறுபாட்டை நசுக்குவதற்கானஅரசின் கவலையில், அதன் மனதில் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளபோராட்ட உரிமைக்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடையிலான கோடு மங்கிவருவதாகத் தெரிகிறது. இந்த மனநிலை தொடர்ந்து நீடித்தால், அது ஜனநாயகத்திற்கு சோகமான நாளாக மாறிவிடும்" எனவும்தெரிவித்துள்ளது.

caa Delhi delhi high court
இதையும் படியுங்கள்
Subscribe