டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டிய நிலையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டி நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 07.00 மணிக்கு தொடங்குகிறது. காற்று மாசு காரணமாக இன்றைய போட்டியில் சுவாச கவசம் அணிந்தபடி வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

delhi heavy air pollution India vs Bangladesh t20 match

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், அணியை ரோஹித் சர்மா வழி நடத்துகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20 போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதற்கிடையே காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளதை அடுத்து, டெல்லி மற்றும் ஹரியானா மாநில முதல்வர்கள் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் காற்று மாசு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் நாளை (04/11/2019) விசாரிக்கிறது.