காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு முறை அமலுக்கு வந்தது. அதன்படி ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் என்ற அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளன. இன்று தொடங்கிய வாகனக் கட்டுப்பாடு நவம்பர் 15- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கு மட்டும் வாகன கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்களுடன், பிரதமரின் முதன்மை செயலர் டெல்லி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். காற்றின் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளன.