டெல்லியில் கலவரம் பாதித்த பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் பார்வையிட்டார்.

delhi governor visits affected area

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன. இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கலவரத்தில் இதுவரை 39 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மஜுபூர் உள்ளிட்ட பகுதிகளை டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் பார்வையிட்டு, அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.