arvind kejriwal

இங்கிலாந்தில் பரவி வந்த மரபணு மாற்றமடைந்த புதிய வகை கரோனா, மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வருபவர்கள், சமீபத்தில் வந்தவர்கள் ஆகியோருக்கு, புதிய வகை கரோனாதொற்று ஏற்பட்டிருக்கிறதா எனகண்டறிய அவர்களுக்கு மரபணு வரிசைமுறை சோதனைசெய்யப்பட்டு வருகிறது.

Advertisment

இதுவரை இந்தியாவில், 82 பேர் புதிய வகை கரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்13 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதில்இங்கிலாந்திலிருந்து வந்தவர்களோடு தொடர்பில்இருந்தவர்களும் அடங்குவார்கள் என்றும் தகவல்கள்வெளியாகிவுள்ளன. மேலும், டெல்லிஅரசு, இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களை இந்த மாதஇறுதி வரை ரத்து செய்ய வேண்டும்என கோரிக்கைவிடுத்தது.

இருப்பினும், இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு இன்று விமான சேவை தொடங்கியது. இந்நிலையில் டெல்லி அரசு, இங்கிலாந்திலிருந்து இந்திய வரும் பயணிகள் அனைவரும், விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளது. பயணிகள், தங்கள் சொந்தசெலவில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென கூறியுள்ள டெல்லி அரசு, அவர்களுக்குக் கரோனா தொற்று உறுதியானால் தனிமை மையத்தில் தனிமைப்படுத்தப்படுவர்கள் என்றும், கரோனாஇல்லையென்றாலும், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்கள் வீட்டில்7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும்டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Advertisment