ADVERTISEMENT

'வன்முறைக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை'- பாரதிய கிசான் சங்கம் விளக்கம்!

04:32 PM Jan 26, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாரதிய கிசான் சங்கம் விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT

டெல்லி ஐடிஓ சந்திப்பு பகுதியில் டிராக்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கலைந்துச் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தியதாகவும், அவர்கள் கலைந்துச் செல்ல மறுத்து, காவல்துறையினரைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், தடுப்புகளை விவசாயிகள் சேதப்படுத்தி, வன்முறையில் ஈடுபட முயன்றதால் காவல்துறையினர் விவசாயிகள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டை வீசியதாகக் காவல்துறை வட்டார தகவல் கூறுகின்றனர்.

இந்த வன்முறை சம்பவம் குறித்து விளக்கமளித்த பாரதிய கிசான் சங்கம், டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போராட்டத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளனர். அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியில் பங்கேற்றவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளோம்; விரைவில் அவர்களைப் பிடித்துத் தருவோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் சேதமடைந்தன. விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே, டெல்லியில் உள்ள செங்கோட்டைக்குள் டிராக்டர்களுடன் நுழைந்துள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விவசாயிகள் யாரும் சட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள், குடியரசுத் தலைவர் இல்லம், நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT