டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

DELHI DEPUTY CM MANISH SISODIYA PRESS MEET

இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisment

DELHI DEPUTY CM MANISH SISODIYA PRESS MEET

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, "டெல்லி வடகிழக்கு பகுதிகளில் வன்முறை காரணமாக நாளை (26/02/2020) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (26/02/2020) நடைபெறவுள்ள சிபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே டெல்லியில் சட்டம் ஒழுங்கை கவனிக்க சிறப்பு காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment