டெல்லியில் நடைபெறும் தசரா விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாடு முழுவதும் தசரா விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் இறுதி நாளான இன்று ராவண உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்துடெல்லியில் உள்ள துவாரகாவில் இன்று மாலை நடக்கும் தசரா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமருடன் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். ராவண உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மெட்ரோ ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.