டெல்லியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் டிஸ் ஹசாரி என்ற இடத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் இன்று மதியம் வழக்குரைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இன்று மதியம் 1.35மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது என டெல்லி காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.