Advertisment

பிரபல திரையரங்க நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்...

delhi court fined inox cinemas in a case against pvr

பிரபல திரையரங்க நிறுவனமான 'ஐநாக்ஸ்' நிறுவனத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

'ஐநாக்ஸ்'மற்றும் 'பி.வி.ஆர்.' திரையரங்க நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸ், மும்பை ஆகிய இடங்களில் பி.வி.ஆர். நிறுவனம் நிலம் வாங்கியதில் விதிமீறல் நடந்துள்ளதாக 'ஐநாக்ஸ்' நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த சூழலில், இதற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதன்படி, பி.வி.ஆர். திரையரங்கு நில ஒப்பந்தங்களில் எந்த விதமான முறைகேடுகளும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக 'ஐநாக்ஸ்' நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம், அடுத்த 90 நாட்களுக்குள் இந்த அபராதத்தைச் செலுத்த 'ஐநாக்ஸ்' நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

Advertisment

pvr
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe