delhi corona affected people count controversy

டெல்லியில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அரசு குளறுபடி செய்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகிகள் திடீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

Advertisment

டெல்லியில் இதுவரை 13,418 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 261 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசாங்கம் கூறுவதை விட மூன்று மடங்குவரை அதிகமாக இருக்கலாம் என மாநகராட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஏற்கெனவே, கடந்த மாதம் இதேபோன்ற குற்றச்சாட்டு ஆம் ஆத்மி அரசு மீது வைக்கப்பட்ட போது, அதனை அக்கட்சியினர் மறுத்தனர்.

Advertisment

இந்நிலையில் தற்போது இதுகுறித்து மீண்டும் குற்றம்சாட்டியுள்ள டெல்லி தெற்கு மாநகராட்சியின் அவைத் தலைவர் கமலாஜித் ஷெராவத், "எங்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் கரோனாவால் 309 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் கரோனாவில் உயிரிழந்தார்கள் என அரசு மருத்துவமனை சான்று வழங்கியுள்ளனர். அதன்பின் அவர்களைப் புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்தோம். ஆனால் அரசாங்கம் கூறும் கணக்குகளில் வேறுமாதிரியான தகவல்கள் உள்ளன.

வடக்கு மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையே 600 பேருக்கு மேல் இருக்கும். அரசு இப்போது கணக்கில் காட்டும் எண்ணிக்கையை விட உண்மையான பலி மூன்று மடங்கு இருக்கும். மக்களிடம் நல்ல பெயரைப் பெற அரசு பொய்யான தகவல்களை வெளியிடுகிறது" எனத் தெரிவித்துள்ளார். இதுபோல டெல்லி வடக்கு நிர்வாகியும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.