தமிழகத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில், இதேபோன்ற திட்டம் டெல்லியிலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி முதல் 200 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என அம்மாநில முதல்வர் அரவின் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்கட்டணத்தில் 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.