Harshita Kejriwal

டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள்ஹர்ஷிதா கெஜ்ரிவால். இவர் பயன்படுத்தப்பட்ட சோஃபாவை, ஓ.எல்.எக்ஸ்தளத்தில்விற்க முயன்றுள்ளார். அப்போது சோஃபாவைவாங்க பேரம் பேசி முடித்தஒருவர், குறிப்பிட்ட தொகைக்குஒத்துக்கொண்டு, முதலில் ஒரு சிறிய தொகையை அனுப்பியுள்ளார்.

Advertisment

இதன்பிறகு சோஃபாவிற்கான மீதி பணத்தைஅனுப்புவதற்கு, பார் கோட் ஒன்றை அனுப்பி, அதனைஸ்கேன் செய்யக் கூறியுள்ளார். ஹர்ஷிதா அதனைஸ்கேன்செய்ததும், அவரதுவங்கி கணக்கிலிருந்து முதலில் 20 ஆயிரமும், பின்னர் 14 ஆயிரமும் பறிபோயுள்ளது.

Advertisment

இதனால் அதிர்ச்சி அடைந்தஅவர், அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.