நாடு முழுவதும் கரோனாஇரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி, நேற்று மாநில முதல்வர்களோடு கலந்தாலோசித்தார். அப்போது, 'தடுப்பூசி திருவிழா' நடத்த ஆலோசனை வழங்கினார். இதற்கிடையே, டெல்லியில் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, அங்கு ஏற்கனவே ஏப்ரல் 30 ஆம் தேதிவரை அங்கு இரவுநேரஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில்டெல்லியில் நேற்று 7,437 பேருக்கு கரோனாஉறுதியானது. இதனைத்தொடர்ந்து கரோனாஅதிகரிப்பால், டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மறுஉத்தரவு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.