விவசாயிகளை தடுக்க டெல்லி எல்லை சீல் வைப்பு!

delhi chalo haryana farmers police state border closed

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான 'டெல்லி சலோ' என்ற பேரணியைத் தடுக்க ஹரியானா- டெல்லி மாநில எல்லைகளை சீல் வைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர் டெல்லி காவல்துறையினர். மேலும் எல்லைகளில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

delhi chalo haryana farmers police state border closed

டெல்லி- குருகிராம் எல்லையில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளார்.

a

delhi chalo Farmers police state border
இதையும் படியுங்கள்
Subscribe