டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

delhi caa issue latest updates

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன. இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisment

இந்நிலையில், டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 48 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணையும்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்நிலையில் வன்முறை பாதித்த ஜாஃப்ராபாத் பகுதியில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.