delhi BJP MLA threatens boy and released video

Advertisment

சிறுவனை பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் மிரட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளது. டெல்லியின் பட்பர்கஞ்ச் தொகுதியில் ரவீந்தர் சிங் நேகி என்பவர் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இந்த நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ ரவீந்தர் சிங், ஒரு சிறுவனை மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், சிறுவனிடம் ரவீந்தர் சிங் எங்கே வசிக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு அந்த சிறுவன், பக்கத்து தெருவில் வசிப்பதாகக் கூறினார். ‘வேறு யாருடைய வீட்டிற்கும் வெளியே உட்காரக் கூடாது, அப்படி உட்கார்ந்தால் சிறைக்கு அனுப்பிவிடுவேன்’ என்று ரவீந்தர் சிங் அந்த சிறுவனை மிரட்டுகிறார். இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் பா.ஜ.க எம்.எல்.ஏவை விமர்சித்து வருகின்றனர்.