Advertisment

தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டெல்லியில் இந்த ஆண்டும் தடை!

arvind kejriwal

இந்தியா தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருந்துவருகிறது. இதனால் கடந்து வருடம் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த வருடமும்டெல்லியில் பட்டாசு வெடிக்கவும், அதனை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Advertisment

கடந்த மூன்று வருடங்களாக,தீபாவளியின்போது காற்று மாசுபாடு அபாயகரமான நிலையில் இருந்ததைக்கருத்தில்கொண்டு, கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடைவிதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளஅரவிந்த் கெஜ்ரிவால், இந்த நடவடிக்கை மக்களின்உயிரைக் காக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

பட்டாசுகளைசேமித்து வைக்கவும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Arvind Kejriwal crackers deepavali Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe