டெல்லி தேர்தல் முடிவுகள்-  62 தொகுதிகளை கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி!

டெல்லியில் 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 8- ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி 21 மையங்களில் இன்று (11/02/2020) காலை 08.00 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளது.

DELHI ASSEMBLY ELECTION RESULTS 2020 62 ASSEMBLY CONSTITUENCY WON AAP

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாஜக கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது.

ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. டெல்லி மாநில முதல்வராக மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.

DELHI ASSEMBLY ELECTION RESULTS 2020 62 ASSEMBLY CONSTITUENCY WON AAP

இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டமன்ற குழு தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Aam aadmi Arvind Kejriwal delhi assembly election RESULTS 2020 won
இதையும் படியுங்கள்
Subscribe