ADVERTISEMENT

மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்!

12:37 PM Feb 16, 2020 | santhoshb@nakk…

டெல்லி மாநில முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ADVERTISEMENT


டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறையாக டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் அனில் பைஜல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

ADVERTISEMENT

அதை தொடர்ந்து துணை முதல்வராக மணீஷ் சிசோடியா மீண்டும் பதவியேற்றார். அதேபோல் கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோரும் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.


இந்த விழாவில் பங்கேற்க டெல்லி மக்களுக்கும், டெல்லி பாஜக எம்பிக்கள், டெல்லி எம்.எல்.ஏக்கள் மற்றும் பிரதமருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பிற மாநில தலைவர்களுக்கும், முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துப்புரவு பணியாளர், ஆசிரியர் என பலத்துறையைச் சார்ந்த அரசு பணியாளர்கள் 50 பேர் கலந்துக் கொண்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கான டெல்லி மக்களும் பங்கேற்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வைரலான குழந்தையும் சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்றது.

நடந்து முடிந்த டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. மேலும் பாஜக கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT