கோவிட் தொற்று காரணமாக, பாதிப்புக்குள்ளான டெல்லி விமானப் போக்குவரத்து, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பண்டிகைக்காலகூட்டம் உள்ளிட்ட காரணங்களால், டெல்லி விமான நிலையம் 20 லட்சஉள்நாட்டுப் பயணிகளை எதிர்கொண்டுள்ளது. எனவே, விரைவில் கரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் சர்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மே.25-ல் விமான சேவை தொடங்கியது முதல், அக்டோபர் வரை டெல்லிக்கு வருகை தந்த சர்வதேசப் பயணிகளின்எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டுள்ளது.